தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்
பரமக்குடி; பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட அனைத்து வகையான போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் போதை பாக்குகள் விற்பனை சிறிய அளவிலான கடைகளிலும் அதிகஅளவில் விற்கப்படுகிறது. இவற்றை சட்டவிரோதமாக விற்பதுடன் பல மடங்கு லாபம் வைத்து இளைஞர்களை குறி வைத்து விற்கின்றனர். பள்ளி, கல்லுாரி அருகிலும் மற்றும் அரசு அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளிலும் விற்பனை அமோகமாக நடக்கிறது. அவ்வப்போது இது குறித்து அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தும் நிலையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட போதை பாக்குகளை பறிமுதல் செய்யும் நிலை உள்ளது. ஆகவே பரமக்குடியில் போதை கலாச்சாரத்தை தடுக்க போலீசார், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.