ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதில் மோதல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் சில நாட்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததால் அப்பகுதியை சுற்றிலும் மக்கள் பயன்பாடு அதிகரித்தது. இந்நிலையில் அம்மா உணவகம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா சிலை அருகே ஏற்கனவே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளதாகவும், அப்பகுதியில் மற்றொரு ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க கூடாது என தெரிவித்தனர். இந்நிலையில் இரு தரப்பினரிடையே நேற்று தகராறு முற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கேணிக்கரை போலீசார் நகராட்சியில் அனுமதி பெற்று ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்கலாம். எனவே இரு தரப்பினரும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதன்பின் ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து சென்றனர்.