உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் சந்தையில் நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை

ரெகுநாதபுரம் சந்தையில் நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போலீசார் முறைப்படுத்த வேண்டும்.கடந்த மூன்று மாதங்களாக ரெகுநாதபுரம் வாரச்சந்தை நடக்கும் திடலில் மழை நீர் தேங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் காய்கறி, மளிகை, பழ வியாபாரிகள் உள்ளிட்ட சந்தைக்கு வரக்கூடிய அனைத்து வியாபாரிகளும் பெரியபட்டினம் ரெகுநாதபுரம் பிரதான சாலையின் இரு புறங்களிலும் தற்காலிக கடைகளை விரிக்கின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது:ரெகுநாதபுரம் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடக்கிறது. சாலையின் இரு புறங்களிலும் சாலையோர சந்தை வியாபாரிகள் கடை வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையோரங்களில் டூவீலர்கள் நிறுத்துவதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது.இப்பகுதியில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கென திருப்புல்லாணி யூனியன் மற்றும் ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.எனவே வசூலில் காட்டும் ஆர்வத்தை வார சந்தையை மேம்படுத்துவதற்கு செலவிட வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். திருப்புல்லாணி போலீசார் கூடுதல் எண்ணிக்கையில் அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி