உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெண்குளம் ஷிபான் நுார் குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 2024ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் ஆண்கள் பிரிவில் ஷிபான் நுார் குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி முதலிடம், அரசடிவண்டல் என்.எம்.எஸ். அரசு உயர்நிலைப்பள்ளி 2ம் இடம், ஆர்.எஸ்.மங்கலம் ேஹாலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி 3ம் இடம் பெற்றனர். மாணவிகள் பிரிவில் திருவரங்கம் திருஇருதய மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், ஷிபான் நுார் குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி 2ம் பரிசு, செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி 3ம் பரிசு வென்றனர்.சாதித்த மாணவர்கள், பயிற்றுவித்த பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளித்தாளாளர் மன்சூர், செயலாளர் டாக்டர் நுார்ஹவ்வா, முதல்வர் நிவேதினி, துணை முதல்வர் சிவகுமார் பாராட்டினர். ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை