உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ் வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

தமிழ் வார விழா போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

ராமநாதபுரம் : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசால்ஏப்., 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை