உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: கராத்தே போட்டியில் சாதனை படைத்த ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர் முகமது இக்ரமுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 5ம் வகுப்பு மாணவர் முகமது இக்ரம் 9, இவர் கோவை ஸ்ரீசுக பிரம்ம மகரிஷி வித்யா மந்திர் பீடம் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் கலந்து கொண்டு 1 மணி 30 நிமிடம் தொடர்ந்து கராத்தே செய்து உலக சாதனை படைத்தார். மாணவரின் சாதனையை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து மாண வருக்கு சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், கராத்தே போட்டியில் தொடர் சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை தேடிய பள்ளி மாணவர் முகமது இக்ரமை பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டி கவுரவப்படுத்தப்பட்டார். பள்ளி தாளாளர் ஆரோக்கிய மேரி, முதல்வர் லீமா ரோஸ் உட்பட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி