மேலும் செய்திகள்
பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம்: வி.ஏ.ஓ., கைது
5 minutes ago
த.வெ.க., பூத்கமிட்டி கூட்டம்
09-Dec-2025
நம்பியான் வலசையில் கும்பாபிஷேகம்
09-Dec-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யு.சி, மாவட்ட செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லோகநாதன், துணைச் செயலாளர் முருகானந்தம், பொருளாளர் முருகையா முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் முருகன் பேசியதாவது: தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை கைவிட வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6000 வழங்க வேண்டும். தற்போது நலவாரியம் அறிவித்த ரூ.2000 ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர் வீட்டு வசதி திட்டத்தில் 300 சதுர அடிக்குள் வீடு கட்ட வேண்டும் என்பதை மாற்றி சதுர அடிகளை உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தினமும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
5 minutes ago
09-Dec-2025
09-Dec-2025