உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் ஆலோசனை கூட்டம்

முதுகுளத்துாரில் ஆலோசனை கூட்டம்

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., சந்தீஷ் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, டி.எஸ்.பி.க்கள் சண்முகம், இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். அப்போது செப்.11ல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், கிராமமக்கள் வந்து செல்லக்கூடிய வழித்தடங்கள், கிராம மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் கிராமமக்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் பரமக்குடி செல்ல வேண்டும். டூவீலர், சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளும் பொதுமக்களுக்கு வழங்கினர். உடன் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ்,சாகுல்ஹமீது, சக்திமணிகண்டன், ராதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை