உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்   வாயில் கூட்டம் 

நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்   வாயில் கூட்டம் 

ராமநாதபுரம்; ராமநாதபுரம் நுகர் பொருள் வாணிப கழகஅலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.,பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடந்தது. மண்டல செயலாளர் பழனி தலைமை வகித்தார். பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் ராமைய்யா, துணைச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் அற்புதராஜ், கண்ணன் முன்னிலை வகித்தனர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம், மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர்.இதில் 2013 முதல் 2016 வரை பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.சி.சி.எப்., மூலம் நெல் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பொது விநியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்.கொள்முதல் பணியாளர்களக்கு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுஉள்ள டி.ஏ.வை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மண்டல துணைத்தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி