தெரு நாய்களை கட்டுப்படுத்துங்கள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால் பள்ளி குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர்.பரமக்குடி சாலை, செட்டியமடை, டி.டி.மெயின் ரோடு, கோழியார்கோட்டை, புல்லமடை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கூட்டம், கூட்டமாக தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களால் பள்ளி செல்லும் குழந்தைகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.