உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவில் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரியும் மாடுகள்

இரவில் பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரியும் மாடுகள்

தொண்டி: தொண்டியில் இரவில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டி பழைய பஸ் ஸ்டாண்டில் இரவில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ரோட்டில் படுத்து உறங்குவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: நாளுக்கு நாள் மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது. தொண்டி பேரூராட்சி அலுவலர்கள் மாடுகளை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் மெத்தனமாக உள்ளனர். இரவில் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதி விழுந்து காயமடைந்தால் அவர்களை காப்பாற்றக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே பேரூராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி