உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவ.30க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை  

நவ.30க்குள் பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுரை  

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்ய முடியாமல் தவித்தனர். களை எடுப்பு, உரமிடுதல் போன்ற பணிகள், தீபாவளி தொடர் விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. எனவே நவ.30 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி நவ.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. நவ.30க்கு மூன்று நாட்களே இருப்பதால் உடனடியாக காப்பீடு செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ