உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டி மீன் மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்: போக்குவரத்து பாதிப்பு

தொண்டி மீன் மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்: போக்குவரத்து பாதிப்பு

தொண்டி: பொங்கல் விடுமுறையால் தொண்டி மீன் மார்கெட்டில் மீன்கள் வாங்க ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொங்கல் விழா பண்டிகையை நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடிய மக்கள் நேற்று மாட்டுப்பொங்கல், காணும் பொங்கலை முன்னிட்டு கடல் சார்ந்த உணவு வகையான மீன், இறால், நண்டு ஆகியவற்றை அதிகாலையிலேயே வாங்கிச் செல்ல தொண்டி மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் குவிந்தனர். காலை 6:00 மணி முதல் கூட்டம் வரத்துவங்கியது. காலை 10:00 மணிக்கு மேல் ஏராளமானோர் திரண்டனர். மக்களின் கூட்டத்திற்கு ஏற்ப வரத்து இல்லாததால் மீன்கள் விலை உயர்ந்தது. பொதுமக்கள் பேரம் பேசி மீன்களை வாங்கிச் சென்றனர். விளை மீன் கிலோ ரூ.500, காரல் ரூ.500. இறால் ரூ.600, நண்டு ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டன.சிவகங்கை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் தொண்டி மீன் மார்க்கெட்டிற்கு சென்றனர். மீன்களை வாங்க வந்த மக்கள் சாலையின் இருபுறமும் டூவீலர் மற்றும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொண்டி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை