உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வெள்ளரிப்பழம் விற்பனை ஜோர்

வெள்ளரிப்பழம் விற்பனை ஜோர்

ரெகுநாதபுரம்: சீசனை முன்னிட்டு ராமநாதபுரம் ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளரிப்பழம் எனப்படும் புட்டு பழம் விற்கிறது.ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை கண்மாய், அம்மன் கோவில், ஆர்.எஸ்.மடை, பால் கரை உள்ளிட்ட இடங்களில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது.வெள்ளரிக்காயை அதன் கொடிகளில் இருந்து பறிக்காமல் நன்கு பருத்து பெரிய அளவில் வந்தவுடன் அவை மஞ்சள் நிற பழமாக மாறுகிறது.அவற்றை உரிய முறையில் பறித்து ராமநாதபுரம், ரெகுநாதபுரம் ஆகிய இடங்களில் விற்கின்றனர். நன்கு திரட்சியான வெள்ளரிப்பழம் ரூ.20 முதல் 50 மற்றும் 60 வரை அளவிற்கு தகுந்தாற் போல் விற்கிறது.புட்டு பழம் எனப்படும் வெள்ளரி பழத்தை சீனி அல்லது நாட்டுச் சர்க்கரையில் கலந்து சாப்பிடலாம் என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !