மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
23-Jul-2025
பெரியபட்டினம் : முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் உலகை பாதுகாத்தல் மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமை வகித்தார். முதல்வர் சூசைநாதன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சசிரேகா வரவேற்றார். கல்லுாரி திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் டி.எஸ்.பி., பாலச்சந்திரன், எஸ்.ஐ., ரிச்சட்சன் ஆகியோர் பங்கேற்று சைபர் கிரைம் குறித்த பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் அதில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றிலிருந்து விடுபடுதல் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல் பற்றியும் படத்துடன் செயல் விளக்கம் அளித்தனர். துணை முதல்வர்கள் மகாலட்சுமி, மதன் நாகன் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுகன்யா நன்றி கூறினார். மாணவிகள் மரிய மெடோன்சா, ஜெர்லின் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
23-Jul-2025