மூன்றாவது நாளாக சூறாவளி பாம்பன் கடல் கொந்தளிப்பு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் மூன்றாவது நாளாக சூறாவளி வீசுவதால் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.வங்கக் கடலில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ஜன.15 முதல் ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்ட்தால் மீனவர்கள் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.மூன்றாம் நாளான நேற்றும் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. மீனவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.