உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புயல்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

புயல்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம்: வங்ககடலில் உருவான மோந்தா புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். மோந்தா புயல், ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழக கடலோர பகுதியில் மழை பெய்து, கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். அக்.,19ல் வங்க கடலில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால், அன்று முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்த நிலையில், 8 நாட்களுக்குப் பின் இன்று (அக்., 27) மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமாக இருந்த நிலையில், மோந்தா புயலால் மீண்டும் தடைஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ