உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாகனங்களில் ஒலிபெருக்கியால் பாதிப்பு

வாகனங்களில் ஒலிபெருக்கியால் பாதிப்பு

திருவாடானை: வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பொருட்களை கூவி விற்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திருவாடானை, தொண்டி பகுதியில் சரக்கு வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்களை ஒலி பெருக்கியில் கூவி விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தெருக்களுக்கும் செல்லும் வியாபாரிகள் பொதுமக்களை கவரும் வகையில் பாடல்களுடன் விளம்பரம் செய்கின்றனர்.மருத்துவமனை, பள்ளி கட்டடங்கள் அருகே செல்லும் போது நோயாளிகளும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:பள்ளி அருகில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல்கள் ஏற்படுகிறது. ஒலிபெருக்கிகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். வாகனங்களில் அதிக சத்தத்துடன் கூவி விற்பனை செய்யும் வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ