உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதம்

அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதம்

கவலையில் விவசாயிகள்பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் அரியகுடி புத்துார் கண்மாய் மடைகள் சேதமடைந்துள்ளதால் விவசாயில்கள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ள நிலையில் கண்மாயில் தேக்கப்படும் நீரை நம்பி பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில் போகலுார் ஒன்றியம் சத்திரக்குடி அருகே அரியகுடி புத்துார் பெரிய கண்மாய் உள்ளது.இந்த கண்மாயில் இரண்டு மடைகள் உள்ள நிலையில் சில ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. கடந்த ஆண்டு கிராம நிதியிலிருந்து கண்மாயை சீர் செய்த நிலையில் 550 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருவதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.ஆனால் பொதுப்பணித்துறை சார்ந்த இக்கண்மாயில் மடைகள் உடைப்பு குறித்து தெரிவித்தும் எந்த பணிகளும் செய்யாமல் உள்ளனர். இதுகுறித்து விவசாயி பூக்கடப்பு கூறியதாவது:இந்த பகுதியில் பருவ மழை அல்லது வைகை ஆற்று நீர் வரும் நிலையில் கண்மாய்களில் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இங்குள்ள 550 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. வறட்சி காலங்களில் தண்ணீரை தேக்கி பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை