உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் கடலில் பழைய ரயில் பாலத்தை கடந்த படகு சேதம்

பாம்பன் கடலில் பழைய ரயில் பாலத்தை கடந்த படகு சேதம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணியின் ஒரு பகுதியாக, நான்கு மாதங்களுக்கு முன் துாக்கு பாலம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனால், புதிய மற்றும் பழைய ரயில் பாலத்தை கடந்து செல்லும் படகு மற்றும் மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படக் கூடும் என்பதால், பாலங்களை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது.இந்நிலையில், துாக்கு பாலத்தை பொருத்த கடலில் ஊன்றிய இரும்பு உருளைகளை, ஆறு நாட்களுக்கு முன் ரயில்வே பொறியாளர்கள் அகற்றினர். இதனால் பாலத்தை கடந்து செல்ல சிரமம் ஏற்படாது எனக்கருதி, பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து, தென் கடலுக்கு செல்ல, ஒரு விசைப்படகில் இருந்த ஆறு மீனவர்கள் ரயில் பாலங்களை நேற்று கடந்து சென்றனர்.அப்போது, பழைய ரயில் பாலத்தில் உள்ள துாக்கு பாலத்தின் மீது படகின் ஓரம் மோதி உடைந்தது. படகின் உரிமையாளர் யார் என, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ