உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் வெளியேறும் ரோடு சேதம்

பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் வெளியேறும் ரோடு சேதம்

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்கள் வெளி வரும் பகுதியில் ரோடு சேதமடைந்துள்ளதால் டிரைவர்கள் தடுமாறுவதுடன் பஸ்கள் நிலைகுலைகின்றன.மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடி வழித்தடம் பிரதானமாக உள்ளது. இங்கிருந்து தினமும் 80க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து பல நுாறு பஸ்கள் வந்து செல்கின்றன.இதனால் அதிகாலை துவங்கி இரவு 10:00 மணி வரை பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. மதுரை பஸ்கள் நிற்கும் இடத்திலிருந்து அனைத்து ஊர் பஸ்களும் வெளியேறிச் செல்கின்றன.பஸ் ஸ்டாண்ட் மற்றும் நெடுஞ்சாலை ரோடு இடையே ஒரு அடிக்கும் மேல் தாழ்வான பள்ளம் உள்ளது. இதனால் பஸ்களின் முன் மற்றும் பின் டயர்கள் பள்ளத்தில் இறங்கும் போது இரண்டு ஓரங்களிலும் பஸ் படிக்கட்டு சேதமடைகிறது.மேலும் பஸ் நிலை குலைவதால் டிரைவர்கள் உட்பட பயணிகள் அலறும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை