உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஐந்திணை பூங்காவில் தரைத்தளம் சேதம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

ஐந்திணை பூங்காவில் தரைத்தளம் சேதம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே அச்சடிப்பிரம்பில் உள்ள ஐந்திணை பாலை நில மரபணு பூங்கா பராமரிப்பின்றி தரைத்தளம் சேதமடைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த 2015ல் 15 ஏக்கரில் உருவாக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்காவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. பசுமையான புல்வெளிகள், செயற்கை நீரூற்றுகள், தடாகம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காக்கள் இடம்பெற்றுள்ளன.ஐந்திணை பூங்காவின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய தரைத்தளங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: சிமென்ட் பேவர் பிளாக்கில் உள்ள தரைத்தளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரக்கூடிய சிறுவர்கள், முதியவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். எனவே ஐந்திணை மரபணு பூங்காவில் சேதமடைந்த தரைத்தளத்திற்கு புதிதாக பராமரிப்பு பணிகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை