உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கிடாரம் மயானம் செல்லும் சாலை சேதம்

கீழக்கிடாரம் மயானம் செல்லும் சாலை சேதம்

சிக்கல்: சிக்கல் அருகே கீழக்கிடாரம் ஊராட்சி சண்முகநாதபுரத்தில் மயானம் செல்லும் ரோடு ஒரு கி.மீ.,க்கு குண்டும் குழியுமாக உள்ளது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் ரோடு சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் மயானத்திற்கு இறுதிச் சடங்கிற்காக செல்லக்கூடிய பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கீழக்கிடாரத்தைச் சேர்ந்த லாசர் கூறியதாவது: கீழக்கிடாரம் சண்முகநாதபுரத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது.மயானத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய செல்பவர்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது.எனவே கீழக்கிடாரம் ஊராட்சி நிர்வாகத்தினர் புதிய தார் ரோடு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை