உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கல் போலீஸ் குடியிருப்பு அருகே சேதமடைந்த கட்டடம்

சிக்கல் போலீஸ் குடியிருப்பு அருகே சேதமடைந்த கட்டடம்

சிக்கல் : சிக்கல் போலீஸ் குடியிருப்பு முன்புறம் சேதமடைந்த நிலையில் உள்ள ஆபத்தான ஓட்டு கட்டடங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.இங்கு 1960ல் கட்டப்பட்ட ஓட்டு கட்டடங்களில் 2000 ஆண்டு வரை போலீசார் குடியிருந்தனர். அதன் பின் சேதமடைந்த கட்டடத்தை காலி செய்துவிட்டு காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்பில் கட்டப்பட்ட 20 குடியிருப்புகளில் ஏர்வாடி, சிக்கல், கீழச்செல்வனுார் சுற்றுவட்டார போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார் வசிக்கின்றனர். போலீசார்கூறியதாவது:சேதமடைந்த பழைய ஓட்டு கட்டடம் இடிபாடுகளுடன் உள்ளது. கூரை ஓடுகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் விபத்து அபாயம் நிலவுகிறது. குழந்தைகள், பொதுமக்கள் பாதையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே எஸ்.பி., சந்தீஷ் ஆய்வு செய்து இடிபாடுகளுடன் உள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி