உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு; குப்பையால் நோய் பரவும் அபாயம்

சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு; குப்பையால் நோய் பரவும் அபாயம்

தொண்டி; தொண்டியில் சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டடம் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பு இருந்தது.கட்டடங்கள் சேதமடைந்ததால் போலீஸ் ஸ்டேஷன் அருகில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. ஆனால் சேதமடைந்த பழைய போலீஸ் குடியிருப்பு கட்டடம் அகற்றப்படாமல் உள்ளது. தொண்டி மக்கள் கூறியதாவது:சேதமடைந்த போலீஸ் குடியிருப்பு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இரவில் இங்கு சமூக விரோத செயல்கள் நடக்கிறது.மேலும் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இறைச்சி, கோழி, மீன் கழிவுகளும் இங்கு கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியவில்லை. பேரூராட்சி அலுவலர்கள் குப்பையை அகற்றி, கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை