சாய்ந்து விழுந்த மின் கம்பத்தால் அபாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே முதலுார் ரோட்டில் மழையின் போது சாய்ந்த மின்கம்பம் 2 நாட்களாகியும் அகற்றப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. ராமநாதபுரம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அக்.,20 இரவு முதல் அக்.,22 வரை தொடர் மழையால் முதலுார் கிராமத்தில் நயினார்கோவில் ரோட்டோரத்தில் இருந்த இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. தற்சமயம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரோட்டில் கிடக்கும் மின்கம்பங்களால் அவ்வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலையில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை உடன் அகற்றுவதற்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.