உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இருட்டூரணியில் ஆபத்தான பழைய தொடக்கப்பள்ளி: மாணவர்கள் அச்சம்

இருட்டூரணியில் ஆபத்தான பழைய தொடக்கப்பள்ளி: மாணவர்கள் அச்சம்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருட்டூரணி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளிஇடிபாடுகளுடன் செயல்படுகிறது.கடந்த 1960ல் கட்டப்பட்ட ஓட்டு கட்டடத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அதன் பிறகு ரூ. 30 லட்சத்தில் கட்டடம் கட்டப்பட்டு அக்கட்டத்தில் பள்ளி வகுப்பறை இயங்கி வருகிறது. 80 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பள்ளிக்கு அருகே நுழைவு வாயில் பகுதியில் சேதமடைந்த நிலையில் இடிபாடுகளுடன் பள்ளி கட்டடம் உள்ளதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். இருட்டூரணி கிராம பொதுமக்கள் கூறியதாவது:பழைய ஓட்டு கட்டடத்தில் மின் ஒயர்கள் அறுந்து தொங்குகிறது. வவ்வால்கள் அடையும் இடமாக உள்ளன.அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி துவங்கும் நேரம் மற்றும் உணவு இடைவேளை நேரத்தில் மாணவர்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். தெற்கு பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவர் இடிபாடுகளுடன் உள்ளது.இக்கட்டடம் தானாக இடிந்து விழுந்தால் பெரிய விபத்து அபாயம் நிகழும். எனவே பழைய ஓட்டு கட்டடத்தை இடித்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மண்டபம் வட்டார கல்வி அலுவலகத்திலும், ஊராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை