உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் பஸ் கூரையில் ஆபத்தான பயணம்

கமுதியில் பஸ் கூரையில் ஆபத்தான பயணம்

கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தனியார் பஸ்ஸில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி கூரையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்துார் வழியாக தேரிருவேலி கிராமத்திற்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது.அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் பகுதிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். ேற்று முன்தினம் அருப்புக்கோட்டையில் இருந்து தேரிருவேலிக்கு வந்த தனியார் பஸ்ஸில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் பஸ்சின் கூரையிலும், படியிலும் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்து அபாயம் உள்ளது.போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.காலை, மாலையில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை