உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் கர்நாடக கவர்னர் தரிசனம்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கர்நாடகா கவர்னர் தவார்சந்த் கெலாட் தரிசனம் செய்தார்.கவர்னரை, கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். ராமநாதசுவாமி கோயிலில் கவர்னரை குருக்கள், கோயில் ஊழியர்கள் வரவேற்றனர். சுவாமி, பர்வதவர்த்தி அம்மன் சன்னதிகளில் நடந்த பூஜையில் கவர்னர் பங்கேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.முன்னதாக கவர்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டுக்கு சென்றார். அங்கு கலாம் பேரன் சேக்சலீம் மற்றும் உறவினர்களிடம் நலம் விசாரித்தார். கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை என்ற நுாலை கலாம் குடும்பத்தினர் கவர்னரிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ