உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் விபத்தில் பலி 4 ஆக உயர்வு

கார் விபத்தில் பலி 4 ஆக உயர்வு

ராமநாதபுரம் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வி.வடமலைபாளையம் கருடாமுத்துார் பகுதியில் அம்மன் கோயில் கும்பாபிேஷகத்திற்காக தீர்த்தம் எடுக்க ராமேஸ்வரத்திற்கு கார்த்திகேயன் 33, என்பவருக்கு சொந்தமான காரில் நவ., 23ல் அவருடன் சண்முகசுந்தரம் 45, நாகராஜ் 36, தீபக் அரவிந்த் 26, வந்தனர். தீர்த்தம் சேகரித்துவிட்டு திரும்பியபோது ராமநாதபுரம் களத்தாவூர் பகுதி ரோட்டோர பாலத்தில் கார் மோதியது. இதில் சண்முகசுந்தரம், தீபக் அரவிந்த், நாகராஜ் பலியாயினர். கார்த்திகேயன் காயத்துடன் கோவை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பலியானார். இதையடுத்து கார் விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ