உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்பாலைக்குடி மீனவர் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

திருப்பாலைக்குடி மீனவர் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு

தொண்டி: திருப்பாலைக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் ஒழுங்குமுறையை மீறி மற்ற கடற்கரை பகுதியில் படகுகளை நிறுத்தியதால் ஏழு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியை சேர்ந்த சில நாட்டுப்படகு மீனவர்கள் பனைக்குளம், தேவிபட்டினம், தொண்டி புதுக்குடி போன்ற பல்வேறு கடற்கரை பகுதியில் ஒழுங்குமுறையை மீறி படகுகளை கடற்கரையில் நிறுத்துகின்றனர். கனவாய், சங்கு வலை வைத்து பிடிப்பதற்காக இந்த இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு படகுகளை நிறுத்துவதால் அப்பகுதி மீனவர்களுக்கும் திருப்பாலைக்குடி மீனவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இது குறித்து புதுக்குடி மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர். தொண்டி மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ததில் புதுக்குடி கடற்கரையில் திருப் பாலைக்குடியை சேர்ந்த ஏழு படகுகள் நிறுத்தப் பட்டிருப்பது தெரிந்தது. மீன்வளத்துறையால் விதிக்கபட்ட விதிகளை மீறி படகுகளை நிறுத்திய ஏழு படகின் உரிமையாளர்களின் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை