உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்னி தீர்த்த புரோகிதர்கள் மீது அவதுாறு: போலீசில் புகார்

அக்னி தீர்த்த புரோகிதர்கள் மீது அவதுாறு: போலீசில் புகார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தக் கரை புரோகிதர்கள் மீது அவதுாறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புரோகிதர்கள் புகார் அளித்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரை புரோகிதர்கள் நலச்சங்கத் தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் சுந்தரேசன் தலைமையில் புரோகிதர்கள் கோயில் போலீசாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை வரை பக்தர்களுக்கு புரோகிதம் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ண பாண்டே, இவரது தம்பி மொராரி பாண்டே உள்ளிட்ட சிலர் கடந்த சில ஆண்டுகளாக ராமேஸ்வரத்தில் தங்கி புரோகிதம் செய்கின்றனர். கிருஷ்ண பாண்டே இரு தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் கோயிலில் தலைமை குருக்களாக பணிபுரிவதாகவும், அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதம் செய்பவர்கள் பிற சமூகத்தினர், பிராமணர்கள் இல்லை என பொய் கூறி அவதுாறாக பேசியுள்ளார். இதனால் பக்தர்களிடம் குழப்பத்தையும், சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி