உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகளில் சம்பளம் வழங்க தாமதம்துாய்மைப்பணியாளர்கள் பாதிப்பு

பள்ளிகளில் சம்பளம் வழங்க தாமதம்துாய்மைப்பணியாளர்கள் பாதிப்பு

ராமநாதபுரம்:அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்காமல் 2, 3 மாதங்கள் வரை இழுத்தடிப்பதால் பாதிக்கப்படுகின்றனர்.தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யவும், வகுப்பறைகளை பெருக்கவும் துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஒன்றிய பொது நிதி, நகராட்சி பொது நிதியில் இருந்து மாத சம்பளம், கழிப்பறைகளை துாய்மை செய்வதற்கான மூலப்பொருட்களை வாங்கிக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது.அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கழிப்பறைகளை சுத்தப்படுத்த துாய்மைப்பணியாளருக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.2200 ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படாமல் துப்புரவுப்பணியாளர்களுக்கு 3, 4 மாதங்கள் வரை இழுதடிப்பு செய்து தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆர்.சிவபாலன் கூறியதாவது: பள்ளிகளில் துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. சில தலைமயைாசிரியர்கள் சொந்த பணத்திலிருந்து சம்பளம் வழங்கி நிலைமையை சமாளிக்கின்றனர். இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டால் முறையான பதில் தருவது இல்லை. இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் துாய்மைப்பணியாளர்களுக்கு ஓராண்டாக சரியாக சம்பளம் வழங்கப்படுவதில்லை. மாதந்தோறும் சம்பளம் வழங்கவும், நிலுவை சம்பளத்தை வழங்கவும் அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை