மேலும் செய்திகள்
பா.ஜ., ஆர்ப்பாட்டம்....
06-May-2025
தொண்டி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.தொண்டி அருகே நம்புதாளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் (வடக்கு மாவட்டம்) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரகுமான்அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அல்பார்அமீன், மாவட்ட துணைதலைவர் அபுதாகிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காஷ்மீர் பஹல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கபட்டது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்திய தரப்பில் கொடுக்கபட்ட பதிலடி இந்தியாவின் தார்மீக உரிமை என முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். இதுபோன்ற பல்வேறு கருத்துகள் குறித்து கூட்டத்தில் பேசபட்டது.
06-May-2025