உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோடுகளில் பெரும் பள்ளங்களால் வாகன  போக்குவரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

ரோடுகளில் பெரும் பள்ளங்களால் வாகன  போக்குவரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசல் பகுதியில் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என நகராட்சி கவுன்சிலர் ராஜாராம்பாண்டியன் ஏ.எஸ்.பி., சிவராமனிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் நகருக்குள் வந்து செல்லும் அனைத்து அரசு, தனியார் பஸ்கள், மினிபஸ்கள் அரண்மனைப்பகுதியில் பயணியர்களை இறக்கிவிட்டு நயினார்கோவில் ரோடு வழியாக சென்று யானைக்கல் தெருவில் நிறுத்துகின்றனர். அங்கிருந்து புறப்படும் போது சிக்கந்தர் தெரு, ஈசா பள்ளிவாசல் தெரு, அலங்கச்சேரி தெரு ஆகிய குடியிருப்புகள் வழியாக மத்திய கொடிக்கம்பம் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு காசுக்கடை பஜார், சிகில் ராஜவீதி, சுவாமி விவேகானந்தர் தெரு, கேணிக்கரை வழியாக செல்கின்றன.சிங்கந்தர் தெரு, ஈசா பள்ளிவாசல் தெரு, அலங்கச்சேரி தெரு வழியான ரோடு பழைய சந்தோஷ் தியேட்டர் முதல் மத்திய கொடிக்கம்பம் வரை குண்டும், குழியுமாக பெரும் பள்ளங்களாக உள்ளன. இதில் நகராட்சி உதவியுடன் கட்டடக் கழிவுகளை கொண்டு பள்ளங்களை நிரப்பினாலும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படுகின்றன.இதில் மழை நீர் குளம்போல் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதில் செல்லும் டூவீலர்கள், பள்ளிக்குழந்தைகள், முதியவர்கள் தவறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் இந்த ரோட்டை சீரமைக்கும் வரை அசம்பாவிதம் ஏற்படாமலும், பொதுமக்கள் நலன் கருதி இந்தப்பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களையும் மாற்று வழியில் திருப்பி அனுப்ப வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை