உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கோரிக்கை

முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கார்ப்பரேட் கடைகளால் ஏழை முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என மருத்துவர் சமூக நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துமாரி, செயலாளர் செந்தில்குமார், மாநில துணைத்தலைவர் சடாச்சரம், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் தனலட்சுமி, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீர செல்வம், ராமநாதபுரம் நகர் தலைவர் கஜேந்திர பாபு, நகர் செயலாளர் சஞ்சய்காந்தி, துணைத்தலைவர் கருப்பையா, துணை பொருளாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான முடி திருத்தும் தொழிலாளர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். அதில் ராமநாதபுரத்தில் கார்பரேட் சலுான் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறைந்த விலைக்கு கட்டிங் ரூ.99, ேஷவிங் ரூ.49க்கு செய்வதாக விளம்பரம் செய்கின்றனர். இதனால் முடித்திருத்தும் தொழிலை நம்பியுள்ள 120 சலுான் கடைகளை சேர்ந்த 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்து கார்பரேட் கடைகளின் விளம்பரங்களை தடுக்க வேண்டும். அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை