உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூடலுாரில் மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

கூடலுாரில் மின்கம்பத்தை மாற்ற வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் விலக்கிலிருந்து ஆய்ங்குடி வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் கூடலுார் ஊருணி பகுதியில் ரோட்டோரத்தில் சாய்ந்த நிலையில் ஆபத்தான மின்கம்பம் உள்ளது.இரு பக்கமும் உள்ள மின் கம்பிகளின் இழுவிசையில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் நிற்கிறது. சில மாதங்களுக்கு முன்பு புதிய மின்கம்பம் நடப்பட்டது.மின்கம்பத்தை மட்டும் நட்டுச் சென்ற ஊழியர்கள், பழைய மின்கம்பத்தில் இருந்து புதிய மின்கம்பத்திற்கு மின் கம்பிகளை மாற்றாமல் பல மாதமாக கிடப்பில் போட்டுள்ளனர். மேலும் மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன.இதனால் வாகன ஓட்டிகளும், கிராமத்தினரும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி