உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: காசா மீது இஸ்ரேல் தாக்குதலால் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழக்கின்றனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் ராமர் தீர்த்தம் தெருவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இஸ்ரேலுக்கு எதிராகவும், தாக்குதலுக்கு துணை போகும் அமெரிக்காவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ராமேஸ்வரம் நகர் செயலாளர் கருப்பையா, நகர் பொருளாளர் விஜயபிரசாத், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர் செயலாளர் செந்தில்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை