உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கேளல் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அச்சம்

கேளல் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கேளல் கிராமத்தில் 5க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேளல் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சிலநாட்களாகவே இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 5 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, பரமக்குடி தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுப்பித்துள்ளனர். இதனால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சுகாதாரத்துறையினர் கிராமத்தில் முகாமிட்டு மக்களுக்கு பரிசோதனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை