உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலை சுற்றிலும் சீமைக் கருவேலம் புதர்மண்டி இருப்பதால் பக்தர்கள் அச்சம்

கோயிலை சுற்றிலும் சீமைக் கருவேலம் புதர்மண்டி இருப்பதால் பக்தர்கள் அச்சம்

கமுதி: கமுதி சுந்தராபுரம் ஊருணி கரையில் உள்ள களத்தடி முனீஸ்வரர் கோயிலை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியதால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். கமுதி சுந்தராபுரம் ஊருணி கரையில் களத்தடி முனீஸ்வரர் கோயில் உள்ளது. தினமும் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஊருணிக்கரை முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். புதர்மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறி வருகிறது. இப்பகுதியில் சிலர் மது அருந்துவதால் கோயிலுக்கு வரும் பெண்கள் அச்சப்படுகின்றனர். மார்கழி மாதம் அதிகாலை பூஜைக்கு பக்தர்கள் செல்வது கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. கமுதி பேரூராட்சி பணியாளர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி