கோயில் வாசலில் நிறுத்தப்படும் டூவீலர்களால் பக்தர்கள் சிரமம்
தொண்டி: தொண்டியில் உந்திபூத்தபெருமாள் கோயில் முன்பு வாசலில் நிறுத்தப்படும் டூவலர்களால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் வாசலில் சிலர் டூவீலர்களை நிறுத்திவிட்டு சென்று விடுவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டவர்கள் தினமும் இக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். வாசல் முன்பு வரிசையாக டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் கோயிலுக்குள் செல்ல சிரமமாக உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.