ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் அவதி
ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட தீவுப்பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் நேற்று வெப்ப சலனத்தை ஏற்படுத்தியது. நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ரதவீதியில் வெயில் சுட்டெரித்ததால் ஓட்டமாக சென்று கடைகளின் முன்பிருந்த பந்தல் நிழலில் ஒதுங்கினர். மூத்த பக்தர்கள், குழந்தைகள் வெப்ப சலனத்தில் அவதிப்பட்டனர். இதனை தவிர்க்க கோயில் தெற்கு, வடக்கு, கிழக்கு ரதவீதியில் தற்காலிக பந்தல் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பிறகு நகராட்சி தலைவர் நாசர்கான் ஏற்பாட்டில் கோயில் கிழக்கு ரத வீதியில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. இதே போல் வடக்கு, தெற்கு ரதவீதியில் பந்தல் அமைக்க நகராட்சி, கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.