மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் ஏராளமானோர் தரிசனம்
21-Oct-2025
ராமேஸ்வரம்: விடுமுறை நாளையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் அக்னி தீர்த்த கடலில் முதலில் புனித நீராடிய பக்தர்கள் பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். சுவாமி, அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதிகளவு பக்தர்கள் வருகையால் ராமேஸ் வரத்தில் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியை போலீசார் ஒருவழி பாதையாகயும் மாற்றினர். மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
21-Oct-2025