உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடங்கல் சான்று வழங்க லஞ்சம் வாங்கினாரா வி.ஏ.ஓ.,; போட்டோவால் சந்தேகம்

அடங்கல் சான்று வழங்க லஞ்சம் வாங்கினாரா வி.ஏ.ஓ.,; போட்டோவால் சந்தேகம்

கமுதி ; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்குவதற்காக வி.ஏ.ஓ., ரூ.200 லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, போட்டோ பரவுகிறது.நீராவி கரிசல்குளம் கிராமத்தில் நெல், மிளகாய், பருத்தி, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகைகள் விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டில் பருவமழை பொய்த்ததால் விவசாயம் முழுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து பயிர் காப்பீடு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விவசாயிகள் சம்பந்தப்பட்ட பகுதி வி.ஏ.ஓ.,க்களிடம் அடங்கல் சான்று பெற்று ஆன்லைனில் பயிர் காப்பீடு பதிவு செய்து வருகின்றனர். கமுதி அருகே நீராவி கரிசல்குளம் வி.ஏ.ஓ., ஸ்ரீதேவி ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வீடியோ, போட்டோ பரவி வருகிறது.ஸ்ரீதேவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. தாசில்தார் காதர்முகைதீனிடம் கேட்ட போது, விசாரணை நடக்கிறது. நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ