உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால் காரர் மூலம் பெறலாம்

டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால் காரர் மூலம் பெறலாம்

ராமநாதபுரம்: மத்திய, மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுவோர் டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் (ஜூவன் பிரமான்) சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி' மூலம் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 59க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. தங்கள் பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார், அலைபேசி எண், பி.பி.ஓ., எண், ஓய்வூதிய வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை