மேலும் செய்திகள்
கீழக்கரையில் தொடர் மின்தடை
08-Jul-2025
கீழக்கரை: கீழக்கரையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராம சுப்பையர் (டி.வி.ஆர்.,) நினைவு நாள் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இருவரது படத்திற்கு மலர் துாவி மாலை அணிவிக்கப்பட்டது. சிவாஜி சமூக நல பேரவையின் கீழக்கரை நகரத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகர் நிர்வாகிகள் ஜெயராஜ், முருகபூபதி, பாலு, களஞ்சியம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினமலர் நாளிதழ் ஆற்றி வரும் மக்கள் பணி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு உள்ள செய்திகள் குறித்தும், நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நடித்த படங்கள் பற்றியும் நினைவு கூர்ந்தனர். பள்ளி மாணவர்களுக்கு தினமலர் நாளிதழின் பட்டம் மாணவர் பதிப்பின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
08-Jul-2025