மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
19-Feb-2026
முதுகுளத்துார்: முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட துணைத்தலைவர் முருகன், தாலுகா தலைவர் முனியசாமி,செயலாளர் ஆரோக்கிய பிரபாகர், பொரு ளாளர் மயில்சாமி முன்னிலை வகித்தனர். முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் முறையாக 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்கவும் மற்றும் 100 நாள் வேலையில் குளறுபடிகளை நீக்கி அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் பி.டி.ஓ., பாலதண்டாயுதத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். உடன் நிர்வாகிகள் இருந்தனர்.
19-Feb-2026