மேலும் செய்திகள்
மழையை எதிர்பார்த்து ஆனந்துார் விவசாயிகள்
28-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் பருவமழை ஏமாற்றியதால் நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செப்.,ல் நெல் விதைப்பு செய்யப்பட்டது. அதன் பின் பெய்த பருவ மழையில் நெற்பயிர்கள் முளைத்ததை தொடர்ந்து விவசாயிகள் களைக்கொல்லி மருந்து தெளித்தல், களை பறித்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தினர். தற்போது நெற்பயிர்கள் வளர்ச்சி நிலையில் உள்ளன.இந்நிலையில் சித்துார்வாடி, கோவிலேந்தல், வெட்டுக்குளம், உப்பூர், நாகனேந்தல், ஊராணங்குடி, கலங்காப்புளி, பாரனுார், சேந்தனேந்தல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெற்பயிர்கள் முளைப்புக்குப் பின் பருவ மழையின்றி தொடர்ந்து வறட்சி நிலவுவதால்அப்பகுதியில் 8000 ஏக்கர் நெற்பயிர்கள் வெயிலில் வாடி வதங்குகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.சித்துார்வாடி விவசாயி உடையார் கூறுகையில், நெல் வயல்களில் காலை நேரத்தில் பார்க்கும் போது பசுமையாக உள்ளன. நேரம் செல்லச் செல்ல வெயில் அதிகரிப்பதால் பயிர்கள் வாடி வதங்குகின்றன. தற்போதுவரை ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில்பருவமழை ஏமாற்றத்தால் நெற்பயிர்கள் தற்போது கருகத் துவங்கி உள்ளதால் கவலையாக உள்ளது என்றார்.
28-Oct-2024