பட்டாசு குப்பை அகற்றம்
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு நாள்தோறும் 6 முதல் 7 டன் குப்பை சேர்வது வழக்கம். அவற்றை துாய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீடுகளின் முன்பு அதிகளவு வெடித்து சிதறிய பட்டாசு காகிதங்கள் மற்றும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி நடக்கிறது. வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாக 15 டன் வரை குப்பை தேங்கியது. இவற்றை இரண்டு நாட்களாக அகற்றும் பணி நடந்து வருகிறது என துாய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர். சாயல்குடி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு அவற்றில் பசுமை உரம் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகிறது.