உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாவட்ட அளவில் செஸ் போட்டி

 மாவட்ட அளவில் செஸ் போட்டி

ரெகுநாதபுரம்: -ரெகுநாதபுரம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 30வது மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது. 7, 9, 11, 13, 15, 25 வயது பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. மாவட்ட செஸ் கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் தேவி உலகராஜ் தலைமை வகித்தார். அரவிந்த் முன்னிலை வகித்தார். செஸ் கழகத்தின் தலைவர் சுந்தரம் வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், பள்ளி துணை முதல்வர் முத்துக்கண்ணு, நிர்வாக அலுவலர் ஜேக்கப், மாவட்ட செஸ் கழக செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் ராஜா, மலைக்கண்ணன், வள்ளி விநாயகம், அருள் மாரி பங்கேற்றனர். வட்டார அலுவலர் சோமசுந்தரம், ஆர்.எம்.செஸ் அகாடமி தலைவர் சொர்ண கணபதி, சபரி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நடுவர்களாக அகிலன் ராஜா, சசிகுமார், திரவியசிங்கம் பணியாற்றினர். ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை